Skip to main content

Posts

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள். செஞ்சி கோட்டை      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிர...

முக்கியத்துவமென போதிக்கப்பட்டவர்கள்

முதல் நான்கு முக்கியத்துவத்தில் இரண்டாமவர் கிரிக்கெட் ஆர்வம் மிக அதிகம் வாரயிறுதி மேட்ச் பொழுதுகளில் அவர் தடையற பார்க்க நாங்கள் வீட்டினை விட்டு வெளியேற வேண்டும் நாங்கள் வெளியெ செல்ல வற்புறுத்தும் அளவுக்கு அவரை கொண்டுசெல்லக்கூடாதென்பது புரிந்தநாள் ஒரு ஞாயிறு மாலை வீட்டிலிருந்தால் அமைதியாக இருக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழு மற்றும் மூன்று வயதுகளுக்கு புரியாமல் போனதில் வியப்பில்லை அதன் பின்னர் முப்பதை நெருங்கிய ஒன்றும் முப்பதை தாண்டிய இன்னொன்றும் அமைதியாக இருக்கவில்லை இப்பொழுது பிந்தையதை தாண்டிய முந்தைய மூன்றும் ஏழும் அமைதியாக இருக்கின்றன! கார்த்திகை மாதம் ஓர் அழகிய மாதம் கடவுளின் ஏற்பின் காரணமாகவென்பது இப்பொழுதும் எனக்கு ஏற்பில்லை இருந்தபோதும் அந்த நாட்கள் ஓர் அழகியல் விருப்பமாக இருந்ததா என்ற கேள்விக்கு விடையில்லை சிலவற்றை ஏற்கத்தான் வேண்டும் முயற்சிக்க முயற்சித்தேன் காலமும் கட்டாயமும் ஒன்றானது கிரிக்கெட் கிடைத்தது அழகியலுக்கு விடையும் கிடைத்தது நேரம் பரிபோய்விட்டது முதல் நான்கு முக்கியத்துவத்தில் முதன்மையானவர் மூன்றாம் முக்கியத்துவத்தில் நம்பிக்கை மிக அதிகம் வார நாட்கள் எண்ணிக்கையும் கோவ...

நடை பயில்வோமா...

    தன்னுடைய தின தேவைகளுக்கான தேடலில் நாடோடிகளாக வாழ்ந்த காலம் போய் ஒவ்வொரு தேவைகளாய் தீர்த்து, இன்றைய காலகட்டத்தில் நாகரீக மனிதன் அறிவு தேடல் தவிர்த்த ஏனைய பலவற்றில் தன்னுடைய தேவைகளை கிட்டதட்ட பூர்த்தி செய்து கொண்டான்.  அவனுடைய அறிவு தேடலில் அதிகம் வேலை செய்வதில் மூளை முதலிடத்தை எடுத்து கொள்கிறது.  கால்களும், கைகளும்  தன்னுடைய செயல்பாடுகளை குறைத்து கொண்டால் அது அவனுடைய உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டுகொண்ட அவனுக்கு எளிய தீர்வாக கண்டுகொண்டது தான் நடைபயிற்சி.     அனைத்து வித பொருட்களும் நகரத்தில் மட்டுமே கிடைக்குமாகையால் கிராம மக்கள் நகரை நோக்கி அவ்வப்பொழுது படையெடுத்து கொண்டே இருந்த காலம் இப்பொழுது இல்லை.  வீட்டிற்கே டெலிவரி என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்ட காலகட்டாத்தில் திருநெல்வேலி இருட்டுகடை அல்வா உண்ண திருநெல்வேலி வந்து அங்கே கடையில் வரிசையில் நின்று வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அவர்களின் வலைதளம் சென்று ஆன்லைன் ஆர்டர் போட்டால் ஒரிரு நாட்களில் அல்வா வீட்டிற்கே வந்துவிடுகிறது.  இது சரியா தவறா என வாதமே ஏற்க முடியாததை போல...

ஏன் எழுத தவிர்க்கிறேன்... சுய புலம்பல்

     கடைசியாக எப்பொழுது எழுதினேன் என எடுத்து பார்த்ததில் சரியாக 6 மாதமாக எதுவும் எழுதாமல் இருக்கிறேன் என தெரிந்தது.  பல வருடங்களுக்கு முன்னரே பிளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் எனும் போதிலும், டிராஃப்டில் போட்டு விட்டு அதன் பின்னர் டெலிட் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன். இப்பொழுது பயன்படுத்தி கொண்டிருக்கும் பிளாக் இரண்டு வருடங்களாக இருக்கிறது.  முன்பு பயன்படுத்திய இரண்டு பிளாக்ம் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை.      நகைச்சுவையாகவோ, அதீத சிந்தனையோ, ரசனையோ என்னுடைய எழுத்தில் இருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் மனதில் ஓடிக்கொண்டு தான் உள்ளது.  இனிமேல் மாற்ற வேண்டுமா என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் இல்லை.  ஆனாலும் மனதில் பட்டதை எழுதியே ஆக வேண்டுமா? என்றால் இல்லை என்பதே பதில்.  இத்தனையையும் கடந்து ஏன் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்பான பதில் ஒன்று தான் உள்ளது... அது என்னுடைய வாழ்நாள் விருப்பம். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சுற்றுப்பகுதி     நான் எழுதியதை இன்னொருவர் வாசிக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற எண்ணம் வரும...

Disney's Snow White

      திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்கலாகவே இருக்கும்.  மேக்கப் போடாதது போல இருந்தாலும் அப்பொழுதுதான் கழுவியது போலான முகம், lipstick இருப்பது போல் தெரியவில்லை, வெட்டபட்ட முடி, சிறிது கசங்கிய உடை. இதனை உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் snow white ஆல் முடியும்.  போலவே தேர்ந்த மேக்கப், அசத்தலான உடை, அளந்து நறுக்கப்பட்ட நகம் இதனுடன் கருப்பு shade சேர்த்து Snow Whiteன் சித்தி எனும்  வில்லியை இரண்டாவது உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் அதற்கும் இடம் உண்டு.      ஒரு நாடு அதற்கு ராஜா, ராணி அவர்களுக்கு பனிபுயலின் சமயம் இன்முகத்துடன் பிறந்த ஒரு பெண் குழந்தை, அந்த குழந்தை தான் Snow White.  அந்த நாட்டு குடிமக்கள் கூட்டமாக சேர்ந்து, ஆப்பிளை பறித்து தோலை சீவி சுவையான  pie சமைத்து ஒன்றாக ஆடி, பாடி pie உடன் அன்பினையும் பகிர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.     வாழ்வில் இன்பம் என்பது ஒரு பகுதி போல் துன்பமும் ஒரு பகுதி என்பதிற்கு ஏற...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...

புத்தகப் பருவம்... (பூமர்)

புத்தகம் நமக்காகான  ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம். நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல.  வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று. எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை. மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர். அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும்.  அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும். தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம்.  ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள். பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம்.  அதில் அவர்க...