Skip to main content

முக்கியத்துவமென போதிக்கப்பட்டவர்கள்

முதல் நான்கு முக்கியத்துவத்தில்

இரண்டாமவர்

கிரிக்கெட் ஆர்வம் மிக அதிகம்

வாரயிறுதி மேட்ச் பொழுதுகளில்

அவர் தடையற பார்க்க நாங்கள்

வீட்டினை விட்டு வெளியேற வேண்டும்

நாங்கள் வெளியெ செல்ல

வற்புறுத்தும் அளவுக்கு அவரை

கொண்டுசெல்லக்கூடாதென்பது

புரிந்தநாள் ஒரு ஞாயிறு மாலை

வீட்டிலிருந்தால் அமைதியாக

இருக்க வேண்டுமென்கிற கோரிக்கை

எழு மற்றும் மூன்று வயதுகளுக்கு

புரியாமல் போனதில் வியப்பில்லை

அதன் பின்னர்

முப்பதை நெருங்கிய ஒன்றும்

முப்பதை தாண்டிய இன்னொன்றும்

அமைதியாக இருக்கவில்லை

இப்பொழுது பிந்தையதை தாண்டிய முந்தைய

மூன்றும் ஏழும் அமைதியாக இருக்கின்றன!

கார்த்திகை மாதம் ஓர் அழகிய மாதம்

கடவுளின் ஏற்பின் காரணமாகவென்பது

இப்பொழுதும் எனக்கு ஏற்பில்லை

இருந்தபோதும் அந்த நாட்கள் ஓர் அழகியல்

விருப்பமாக இருந்ததா என்ற

கேள்விக்கு விடையில்லை

சிலவற்றை ஏற்கத்தான் வேண்டும்

முயற்சிக்க முயற்சித்தேன்

காலமும் கட்டாயமும் ஒன்றானது

கிரிக்கெட் கிடைத்தது

அழகியலுக்கு விடையும் கிடைத்தது

நேரம் பரிபோய்விட்டது


முதல் நான்கு முக்கியத்துவத்தில்

முதன்மையானவர்

மூன்றாம் முக்கியத்துவத்தில்

நம்பிக்கை மிக அதிகம்

வார நாட்கள் எண்ணிக்கையும்

கோவில் நாட்கள் எண்ணிக்கையும்

சரிசமமென்பதில் வியப்பேதுமில்லை

உண்மையில் அவரெண்ணத்திலது பெருமையே

கோவில் சிறந்த இடமாவென

கேள்விக்கு பதில் ஆமென கொள்ளலாம்

கோவில் மட்டுமே சிறந்த இடமென

வாதத்திற்கு என்ன சொல்லவென தெரியவில்லை

போதிலும் உடனிருக்க 

விருப்பமாகையால் 

கோவில் மட்டுமே சிறந்த இடமென

ஏற்பென்னால் பின்னால் கொள்ளப்பட்டது

இங்கும் பேச கூடாது

நூலகமும் கோவிலும் ஒன்றோ எனும்

கேள்விக்கு இல்லையென பதில்

பிற்காலத்தில் கிடைத்த போதிலும்

இரு இடத்திலும் கட்டாய அமைதியென்பது

அப்போதைய புரிதலின் காரணத்தால்

ஒன்றென கொள்ளப்பட்டது

நம்பிக்கை வந்தது

முதன்மையிடமிருந்து நகர நேரிட்டது


கால ஓட்டத்தில்

கிரிக்கெட் பிடித்திருக்கிறது

கடவுள் புரிந்திருக்கிறது

நூலகம் தெரிந்திருக்கிறது

நேரமிருக்கிறதென புரிதல் கிடைத்திருக்கிறது

சில ஏற்புகள் சரியாக இருக்கிறது

ஆனால்

எவ்வளவு முயற்சித்தும்

நகர்தலை ஏற்க முடியவில்லை

தேங்கிய குட்டையென கொள்ளாமல்

மேலும் பின் செல்லாமல்

இருப்பதே சாதனையென

சமாதானமேற்க மறுக்கிறேன்

நகர்த்தி வைத்து நகர

எளிதென போதிலும்

நகர மறுக்க காரணம் தேடுகிறேன்

வாழ வேண்டுமென

எவ்வளவு விரும்பியும்

வாழ தெரியாதது போல

முதுமலை யானைகள் காப்பகம்

Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...