கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை. தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள். செஞ்சி கோட்டை கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன். சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன். காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன். 2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிர...