Skip to main content

Posts

Showing posts with the label தனிப்பட்டவை

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள். செஞ்சி கோட்டை      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிர...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...