கடைசியாக எப்பொழுது எழுதினேன் என எடுத்து பார்த்ததில் சரியாக 6 மாதமாக எதுவும் எழுதாமல் இருக்கிறேன் என தெரிந்தது. பல வருடங்களுக்கு முன்னரே பிளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் எனும் போதிலும், டிராஃப்டில் போட்டு விட்டு அதன் பின்னர் டெலிட் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன். இப்பொழுது பயன்படுத்தி கொண்டிருக்கும் பிளாக் இரண்டு வருடங்களாக இருக்கிறது. முன்பு பயன்படுத்திய இரண்டு பிளாக்ம் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை.
நகைச்சுவையாகவோ, அதீத சிந்தனையோ, ரசனையோ என்னுடைய எழுத்தில் இருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் மனதில் ஓடிக்கொண்டு தான் உள்ளது. இனிமேல் மாற்ற வேண்டுமா என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் இல்லை. ஆனாலும் மனதில் பட்டதை எழுதியே ஆக வேண்டுமா? என்றால் இல்லை என்பதே பதில். இத்தனையையும் கடந்து ஏன் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்பான பதில் ஒன்று தான் உள்ளது... அது என்னுடைய வாழ்நாள் விருப்பம்.
![]() |
| கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சுற்றுப்பகுதி |
நான் எழுதியதை இன்னொருவர் வாசிக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற எண்ணம் வரும்பொழுதே ஒரு கிக் வருகிறது. ஆனால் அதனை தொடர்ந்து அது நன்றாக இருக்க வேண்டுமே எனும் எண்ணம் அந்த கிக்கை முழுதுமாக வற்ற செய்து விடுகிறது. ஆக எழுதுவதும், அதனை டிராஃப்டில் போடுவதும் பின்னர் டெலிட் செய்வதும் இல்லையேல் போஸ்ட் செய்த சில தினங்களில் டெலில் செய்வதும் என வாடிக்கை நிகழ்வாகி விட்டது. இதுவும் கூட போன வாரம் எழுத ஆரம்பித்து ஒரு பேராவுடன் டிராஃப்டில் போட்டு இன்று எடுக்கிறேன். காசு கொடுத்து ப்ளாக் அட்ரஸ் வாங்கி கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிறது.
நான் அவ்வளவாக யாருடனும் பேசுவதும் கிடையாது, பெர்சனல் விஷயங்களை பகிர்வதும் கிடையாது. எங்கேனும் வெளி இடங்களுக்கு செல்லும்போதும் புகைப்படம் எடுப்பது கூட கிடையாது (இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் எடுக்கிறேன்). இது சரியா தவறா என வினா எழும்பொழுது தவறு எனும் விடை எனக்கு ஜட்ஜ்மெண்டலாக தெரிவதில்லை. ஆக இனிமேல் வாரம் இருமுறையேனும் பிளாக் எழுத வேண்டும், இல்லையேல் அடுத்தமுறை சப்ஸ்கிரிப்ஷன் நீட்டிக்க கூடாது என்று முடிவெடுத்துள்ளேன்.
தனி நபர்
தகவல்களை தவிர்த்த டைரியாக இருக்கலாம், பார்த்த படத்தின் விமர்சனமாக இருக்கலாம், முன்பு நடந்த வாழ்க்கை சம்பவங்களாக இருக்கலாம், என்னுடைய பயண அனுபவமாக இருக்கலாம், சமூகத்தில் நடக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் என்னுடைய பார்வையையும் சேர்க்கலாம். இவ்வாறு நிறைய லாம்கள் உள்ளன. அதனை எழுத்தின் மூலம் மடைமாற்றி இதில் சேர்ப்பேனா? அல்லது மீண்டும் என் காம்ப்ளக்ஸ் நான் எழுதுவதை தவிர்க்க காரணமாகுமா? என்பதை காலத்தின் கையில் விட்டு இதனை போஸ்ட் செய்கிறேன்.

Comments
Post a Comment