Skip to main content

Posts

Showing posts with the label கனவு

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள்.      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிருந்து மீண்டுவி...

ஏன் எழுத தவிர்க்கிறேன்... சுய புலம்பல்

     கடைசியாக எப்பொழுது எழுதினேன் என எடுத்து பார்த்ததில் சரியாக 6 மாதமாக எதுவும் எழுதாமல் இருக்கிறேன் என தெரிந்தது.  பல வருடங்களுக்கு முன்னரே பிளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் எனும் போதிலும், டிராஃப்டில் போட்டு விட்டு அதன் பின்னர் டெலிட் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன். இப்பொழுது பயன்படுத்தி கொண்டிருக்கும் பிளாக் இரண்டு வருடங்களாக இருக்கிறது.  முன்பு பயன்படுத்திய இரண்டு பிளாக்ம் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை.      நகைச்சுவையாகவோ, அதீத சிந்தனையோ, ரசனையோ என்னுடைய எழுத்தில் இருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் மனதில் ஓடிக்கொண்டு தான் உள்ளது.  இனிமேல் மாற்ற வேண்டுமா என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் இல்லை.  ஆனாலும் மனதில் பட்டதை எழுதியே ஆக வேண்டுமா? என்றால் இல்லை என்பதே பதில்.  இத்தனையையும் கடந்து ஏன் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்பான பதில் ஒன்று தான் உள்ளது... அது என்னுடைய வாழ்நாள் விருப்பம்.     நான் எழுதியதை இன்னொருவர் வாசிக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற எண்ணம் வரும்பொழுதே ஒரு கிக் வருகிறது.  ஆனால் அதன...