Skip to main content

Posts

Showing posts from April, 2026

சைவமாகிய நான்!

  வாரயிறுதிகளில் மட்டும் அசைவம் வாங்கும் வழக்கம் உள்ள வீடு எங்களுடையது.  வீட்டின் நால்வரும் அசைவம் சாப்பிடுவோம்.  முதன்முதலாக உடம்பு சரியில்லை, விரதம் என அடுத்தடுத்து காரணங்கள் வைத்து அசைவம் தவிர்த்த அம்மா இப்பொழுது உடல்நிலை காரணம் காட்டி முழுதும் நிப்பாட்டி கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.  புரட்டாசி மாதம் உள்ளிட்ட சில காரணம் வைத்து சமைப்பதும் இல்லை.  ஒரு சில சடைப்புகள் செய்து இப்பொழுது சமைக்க ஆரம்பித்து இருந்தார். சகோதரியும் இப்பொழுது சைவத்துக்கு மாறிவிட்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக அசைவம் குறைத்த இருவரும் கிட்டதட்ட ஒரே காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டனர்.  முட்டை வைத்திருக்கும் இடத்தை பார்த்தாயா? கோழி கத்துவது பரிதாபமாக இல்லையா? கடையில் வரும் கெட்ட வாடை, சமைக்கும் பொழுது வரும் வாடை, அதனை உண்ட பின் உன் உடலும் நாறும் தெரியுமா? என ஆரம்பித்து அதுகள் என்னென்ன கருமத்தையெல்லாம் திங்கும் தெரியுமா? என அநாவசிய கான்வோக்கள் பின்னர் தந்தையாரை நிதானம் சொல்ல முடியாது என்கிற நிலையில் வீட்டில் நான் மட்டும் நான்வெஜ் என்றானது. ...

பயபக்தியில் சில நேரம்!!!

வழக்கமான வாக்கிங்தான்.     இந்த வாரயிறுதில மாரியம்மன் கோவில் பொங்கலுக்காக தண்ணியெடுத்து ஊத்துற மக்களும் விடியக்காலை நேரத்த ப்ரிஃபர் பண்றாங்க போல.   நிறைய இடங்கள்ல தோண்டி போட்டு வச்சிருக்காங்கங்குறதால என்னோட     ஷு டேமேஜ் ஆயிடுமோன்னு தயக்கத்துல நடந்து போகும் போதே முன்னால சைக்கிள்ல போற ஆள் நடு ரோட்ல எச்சி துப்பிட்டு போறாரு.     அப்பத்தான் கவனிக்கிறேன் கோவிலுக்கு தண்ணீ ஊத்த போற யாரும் செருப்பு போடல, பத்தாக்குறைக்கு ஈரம் சொட்ட சொட்ட நடந்து போறாங்க.     நம்ம நிலைமை பரவால்ல போல. ஆனா இவங்க சாமிய காரணம் வச்சு இந்த அசிங்கத்துலயும், மோசமான ரோட்லயும் செருப்பு போடாம வெறும் கால்ல நடந்து போறாங்களேன்னு கொஞ்சம் பொது நலமா சிந்தனை செல்லும் போது பின்னாடி வந்துட்டு இருந்த கொஞ்ச பேரு… “அவ ஆளு கூட சண்டை போட்டு இப்பல்லாம் எங்கயும் வெளிய போகாம சேர்ந்து போக ஆளும் இல்லாம வீட்லயே தான் கிடக்காலேன்னு பரிதாபப்பட்டு நாளைக்கு எங்க கூட கோவிலுக்கு தண்ணி ஊத்த வாடின்னு கூப்பிட்டா?!”னு காதுல விழ அப்படியே நடை வேகத்தை அவர்களின் வேகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி மீத கதையையும் கேட்டு க...

ஏப்ரல் ஃபூல்…

  காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர்     என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது.     வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது.     இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.     இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.     இந்த நாள் இனிய நாள்.