Skip to main content

விடை தரும் கனவு

     கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள்.

செஞ்சி கோட்டை

    கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.

    சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள்.

அக்கால கொடூர கனவுகளிலிருந்து மீண்டுவிட்டேன் போலும், அத்தகைய கனவுகள் வருவது முற்றிலும் ஒழிந்து விட்டது.  நிகழ்காலத்தில் வரும் கனவுகள் சிறு வயது கனவுகள் போல மிகுந்த ரசனையாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன்.  ஆனாலும் அவ்வப்பொழுது சில ரசிக்குற மாதிரியான கனவுகள் தோன்றுகிறது.

    பல வருடங்கள் தேங்கி இருந்ததால் தான் என்னவோ சில விஷயங்களில் பொது நீரோட்டாத்தில் கலக்க முடிவதில்லை.  அது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய சமயத்தில் கனவில் கிடைத்த விடை தான் சட்டம்.  மிகுந்த சிரமேற்கொண்டு ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் பின்பற்றி நடக்கிறேன்.  அது என்னுடைய அன்றாட வாழ்வை மிகவும் எளிமையாக்குகிறது.

    கனவின் தீர்வுகள் நிம்மதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை நோக்கி கொண்டு செல்லும் போதிலும், ஒரு சில இடங்களில் மட்டும் அதனால் சில பின்விளைவுகளை சந்திக்கிறேன்.  உதாரணத்திற்கு., தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் ஒரு சிக்னல் உள்ளது.  வழக்கமாக சிவப்பு போட்டாலும் அந்த சிக்னலின் மக்கள் யாரும் நிற்பதில்லை.  நான் மட்டும் நின்றதில் சிலரிடம் திட்டு வாங்க நேரிட்டது.

    இன்னொரு உதாரணமாக குப்பையை குப்பை தொட்டியில் போட வேண்டுமென்பது; கவரை பிரித்து அருகிலெதுவும் குப்பை தொட்டி இல்லையென்றால் என்னுடைய பாக்கெட்டில் வைத்து கொள்வேன்,  அது அவ்வப்பொழுது கிண்டலடிக்கப்படுகிறது.  போலவே முன் போல ஏதேனும் சமயத்தில் தேங்குவது போலவோ, குழப்ப மனநிலையோ இருந்தால் ஒரு சில நாட்களின் கனவு தெளிவாக்கி விடுகிறது.

    

விடை தெரிந்தும் அதனை நேரிடையாக எதிர் கொள்ள துணிவு இல்லாமல் போக  அதனை ஆழ்மனது கனவு மூலமாக வழி காட்டி தீர்வை நோக்கி என்னை கடத்துகிறது என்றே நினைக்கிறேன்.



Comments

Popular posts from this blog

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...