பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது. ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது phoneல் பேசவும் செய்வான். அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று.
பேசுவதை தவிர்க்க காரணம்...
எப்பொழுதும் நம்பிக்கையற்று வெறும் dry யாக அவன் பேச்சு இருக்கும், என்னால் இயன்ற அளவு நம்பிக்கை கொடுப்பேன், என்னாலும் அவ்வளவுதான் செய்ய முடியும். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் கொஞ்சம் கூட அவனுடைய அனத்தல்களை தாக்கு பிடிக்க முடியவில்லை. அவன் உண்மையைதான் பேசுகிறானா அல்லது கற்பனை செய்து கொள்கிறானா (i know his condition, so i didn't think he lie about things) என தெரியவில்லை. நேரடியாக சந்தித்து பேசினால் மட்டுமே உண்மை நிலை தெரியும் என எண்ணி, நானே நேரிடையாக சந்திக்க வருவதாக கூறினேன். தான் ஒரு remote placeல் இருப்பதாகவும், இன்னும் பல இத்தியாதிகளையும் சொன்னான்.
பேச்சில் தெளிவில்லை, சொல்வது எதுவும் நம்புவது போல் இல்லை, நேரில் சந்திக்கவும் தவிர்க்கிறான். விஷயம் முழுவதும் தவறாக இருக்கவே நானாக அவனை எந்த வழியிலும் contact செய்ய முயற்சிக்கவில்லை, அவனும் அடுத்து எதுவும் பேசவில்லை. பின்னர் சில வாரங்கள் block செய்து வைத்திருந்தேன்.
இப்பொழுது வேலைக்கு சென்று நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அவனுக்கு வேலை கிடைத்ததை என்னிடம் சொல்லாமல் அவனுடைய fantasy கதைகளை (பொய்) சொல்லி விரக்தியாக, வெறுப்பாக இருப்பதாக தொடர்ச்சியாக அனத்தி என்னை எதற்கு இம்சை செய்ய வேண்டும்? அவனுடைய பேச்சு மிகவும் வித்தியாசமாக இருந்ததினால் அவனை தவிர்க்க block செய்து வைத்திருந்ததனால் எனக்கு guilty வேறு.
Anyway, இவ்வளவு குயுக்தி எண்ணம் கொண்ட ஒரு நபரிடம் இருந்து நகர்ந்து வந்தது எனக்கு நன்மையே. மேலும் பேச்சை தவிர்த்த குற்ற உணர்ச்சியும் இப்பொழுது இல்லை. உன்னுடைய நிலையை எண்ணி உண்மையாக வருந்தி உதவ முயற்சித்த நபரிடம் சொல்லிருக்கலாம் தான் ஆனால் இப்படியாப்பட்ட எண்ண ஓட்டம் உள்ள ஒருவர் என்னிடம் எதுவும் பகிராமல் இருந்ததும் மகிழ்ச்சிதான்.
காலம் அனைவரையும் தோலுரித்து காட்டி விடுகிறது.
No comments:
Post a Comment