வழக்கமான வாக்கிங்தான். இந்த வாரயிறுதில மாரியம்மன் கோவில் பொங்கலுக்காக தண்ணியெடுத்து ஊத்துற மக்களும் விடியக்காலை நேரத்த ப்ரிஃபர் பண்றாங்க போல. நிறைய இடங்கள்ல தோண்டி போட்டு வச்சிருக்காங்கங்குறதால என்னோட ஷு டேமேஜ் ஆயிடுமோன்னு தயக்கத்துல நடந்து போகும் போதே முன்னால சைக்கிள்ல போற ஆள் நடு ரோட்ல எச்சி துப்பிட்டு போறாரு. அப்பத்தான் கவனிக்கிறேன் கோவிலுக்கு தண்ணீ ஊத்த போற யாரும் செருப்பு போடல, பத்தாக்குறைக்கு ஈரம் சொட்ட சொட்ட நடந்து போறாங்க. நம்ம நிலைமை பரவால்ல போல. ஆனா இவங்க சாமிய காரணம் வச்சு இந்த அசிங்கத்துலயும், மோசமான ரோட்லயும் செருப்பு போடாம வெறும் கால்ல நடந்து போறாங்களேன்னு கொஞ்சம் பொது நலமா சிந்தனை செல்லும் போது பின்னாடி வந்துட்டு இருந்த கொஞ்ச பேரு… “அவ ஆளு கூட சண்டை போட்டு இப்பல்லாம் எங்கயும் வெளிய போகாம சேர்ந்து போக ஆளும் இல்லாம வீட்லயே தான் கிடக்காலேன்னு பரிதாபப்பட்டு நாளைக்கு எங்க கூட கோவிலுக்கு தண்ணி ஊத்த வாடின்னு கூப்பிட்டா?!”னு காதுல விழ அப்படியே நடை வேகத்தை அவர்களின் வேகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி மீத கதையையும் கேட்டு க...