அந்த பள்ளம் மிக ஆழமாக இருக்கிறது கம்பிவெளி போடப்பட்டிருக்கிறது எவ்வளவு முயன்றும் தரை தெரியவில்லை எட்டிப் பார்த்து கண்டது சில மர கிளைகளையே அங்கங்கே பாறைகளும் நீட்டிக் கொண்டிருக்கின்றன சில கணங்கள் நின்றுகொண்டிருந்தான் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ரசித்தானா என்பதில் சில சந்தேகங்கள் உள்ளன அந்த பசுமை பள்ளத்தாக்கை சில நாழிகை நேரத்தில் கடந்து விட்டான் ஏன் என தெரியுமா என்றால் தெரியும் என திமிர் பிடித்த ஒற்றைச் சொல்லை மட்டுமே உதிர்க்கிறான் வரும்பொழுது இரண்டு பாட்டில்கள் வாங்கினான் எங்கிருந்து வரும்பொழுது என கேட்காதீர்கள் தண்டவாளத்தை தாண்டி ரயிலை தவறி வரும்பொழுது என உளறுவான் என்னவாயிற்று என்றும் கேட்க கூடாது வாடையுடன் ஏப்பம் மட்டும் வருகிறது என்பது மட்டுமல்லாமல் கொசுக்கள் பாவம் எனவும் பரிதாபம் கொள்வான் அந்த பாட்டில் அவனை ஏமாற்றி விட்டது கொசுக்களுக்கு மட்டுமே எமன் போலும் கொசுக்களிடம் பரிதாபம் கொள்ளும் அவனுடைய வாழ்க்கை எவ்வளவு பரிதாபமானது தெரியுமா அவனுக்கே தெரியாதே என கேளி பதில்களே எழுகிறது இதற்கும் தெரியும் என ஒற்றை சொல்லை உதிர்ப்பான் உண்மையில் அவனுக்கு அது தெரியாதுதான் மேலே விழும் காலும் கைய...