Skip to main content

Posts

Showing posts from November, 2026

மூக்குத்தி அம்மன் 2 - நான் பார்த்த படம்

      பட ஆரம்பத்தில் கொஞ்சமாக சகித்துக் கொள்ளூம் அளவுக்கு இருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் போகப்போக நம்மால் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு எகிறி இறுதியில் நம்மை தியேட்டரை விட்டு அடித்து துரத்தும் அளவுக்கு இரைச்சலாக இருக்கிறது பிண்ணனி இசை.  சமீப காலங்களில் படத்தை கொஞ்சம் பில்டப் ஏற்றச் செய்வதில் ஸ்லோ மோஷன் போல இரைச்சல் இசையும் அதீத அளவு பயன்படுத்தப் படுகிறது என்பதால் இசையமைப்பாளரை மட்டும் குறை சொல்ல முடியாது, மிக முக்கியமாக இயக்குனரையும்.  ஆம், ரசிகர்கள் இதனைதான் கொண்டாடுகிறார்கள் எனும்போது, இல்லை மாட்டேன் என சொல்ல திரைக்கலைஞர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல.  திரைத்துறை இதிலிருந்து மீள ரசிகர்கள் வழிவகை செய்தால் ஒழிய இது மாறாது.  ஆனால், எனக்கு ஜனநாயகன் படத்தின் பிண்ணனி இசை பிடித்திருந்தது ஏனோ!     மறதி தேசிய வியாதி என்பது மனிதர்களுக்கு மட்டும் இல்லை போலும்! கடவுளுக்கும் உண்டென சொல்கிறது மூக்குத்தி அம்மன் (மூக்குத்தி அம்மன் என எழுத வராது பொட்டம்மன் எனவாக  மீண்டும் மீண்டும் எழுதி கொண்டிருக்கிறேன்!!! ஹம்ம்ம்ம்ம்).  மயிலாஞ்சியை மறந்து சோத்து பிழ...

எனக்குன்னே வருவீங்களாடா!!!

          அம்மாவிடம் இன்றொரு தகவலாக தெரிஞ்சுகிட்ட விஷயம் என்னன்னா, வீட்டுல தங்கச்சி இருந்தால் அவ மட்டுந்த்தான் அவங்களுக்கு வெந்நீர், டீ வச்சு கொடுக்கணும் போல.  இதெல்லாம் என்ன கேட்டகிரில வருதுன்னே தெரியல.  Anyways, நரி வலம்போனா என்ன; இடம்போனா என்ன, என்மேல பாயக் கூடாது... that's it.  அவங்க சொல்லாம நானா அவங்களோட எந்த விஷயத்திலும் தலையிடுறது கிடையாது. இன்னைக்கு தெரியாம கேட்டுட்டேன்.  கிச்சன்ல் வந்தபோது, அடுப்பு சும்மாதான் இருந்துச்சேனு தான் வைக்கட்டுமா என கேட்டேன், இல்லைனா நான் ஏன் கேட்க போறேன்.  வழக்கமாவே அவங்களோட எந்த விஷயத்திலயும் சொல்லாம செய்றது கிடையாது, அவ இருக்குறப்போ அவங்களும் என்கிட்ட முடிந்த அளவு எதுவும் சொல்/பேசுறதும் கிடையாது.  இனிமேல் சொன்னாலும் செய்வேனா?!        பைக் சர்வீஸ் பில் 4333. ஏடிஎம் ல 5400 எடுத்தா 400 சேஞ்ச் தேவைப்படும்னு எடுத்தா, அதுல 500 ரூபாய் நோட்டு மட்டுந்தான் வரும் போல. நான் அந்த அமவுண்ட் போடும்போதே கவனிக்காம விட்டதால டிரான்ஸாக்‌ஷன் டிக்லைன் ஆகிடுச்சு. அப்பதான் அடுத்த மிஷின்ல அமவ...