Skip to main content

Posts

வழக்கமான புலம்பல்

     மனதினில் அவ்வளவு சொற்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆனால், எவ்வளவு முயற்சித்தும் எதுவும் எழுத வருவதில்லை. இவ்வாறாகிய புலம்பல் மட்டுமே எழுத்தில் எளிதாக வெளியே வருகிறது.      நிஜங்கள் காயப்படுத்துகிறதா, இல்லை நிஜத்தை ஒதுக்கி வைக்கிறேனா! எனும் கேள்வி மேலும் குழப்புகிறது. ஏதாகினும், ஆரம்பித்தால் மட்டும் போதும், மேற்கொண்டு அதுவே பார்த்துக் கொள்ளும் அல்லவா. இங்கு சிக்கல் என்னவெனில், இன்னமும் நான் ஆரம்பிக்கவே இல்லை என்பதே. ஆரம்பித்துவிட்டால், அடுத்து சரியாக செயல்படுமா எனும் கேள்விக்கு... இல்லை என்பதை கடந்த கால நினைவுகள் சம்பவங்கள் பதிலாகச் சொல்கின்றன. ஆக, ஆரம்பிப்பது மட்டும் சிக்கல் இல்லை என்பது ஓரளவுக்கு புரிபடுகிறது. தொடர முடியாமல் இருக்க காரணம் நிறைய அடுக்குகிறேன்.       நேற்றைக்கு கீபோர்டை சாடினேன். அது வேலை செய்யவில்லையெனில், புதிது வாங்கலாம் அல்லவா; ஆனால் அதற்கு காசு செலவாகும் என சொத்தை காரணம் வைத்து தவிர்த்து விட்டதை வைத்து பார்த்தால் என்னுடைய எடுத்துக்காட்டு கடும் உண்மைகள் மூலமாக என்னை காயப்படுத்துகின்றன எனும் வாதமும் வருகிறது. ...

பால்கனியிலிருந்து...

அது மூன்று வினாடி வீடியோ முதல் வினாடியில் எட்டி பார்க்கிறான் இரண்டாம் வினாடியில் இணைகிறாள் மூன்றாம் வினாடியில் பதறுகிறான் ஆச்சரியம் என்னவெனில் முட்டாளுக்கு மூன்றாம் வினாடி போதுமானதாயிருக்கிறது ஆனால் வீணாய் போன வெகுஜனத்திற்கு போதுமானதாயில்லை மின்சார பிரச்சனையில் மீள முடியாமல் முணுமுணுக்கும் அவனிடம் பேசினால் அத்துனையும் கேட்பான் பேந்த பேந்த முழிப்பவனிடம் முக்காளி கூட கொடுப்பதாயில்லை பாவைகளிடமும் பேசுவதாயில்லை பற்றாளனின் பேச்சை கேட்பதாகவும் இல்லை ஆக  ஆனந்தமாக அணத்துவோம்!!!

கடுப்புகள் நல்லது

சில கோபங்கள் சில வருத்தங்கள் சில குழப்பங்கள் காரணம் கண்டு கொண்டபின் இதுதான் உண்மை காரணமா என மீண்டும் அதே போலான சில குழப்பங்கள் சில வருத்தங்கள் சில கோபங்கள் காரணம் கண்டதின் தொடர்ச்சியாக தீர்வின் பக்கம் செல்ல எத்தனிக்கையில் கடந்த கால கைதியாக மனம் செல்ல மீண்டும் சில வருத்தங்கள் சில கோபங்கள் சில குழப்பங்கள் எட்டிச் சென்று தீர்வு இதுவென முடிவெடுக்கையில் இதுதான் தீர்வா என கேள்வி எழும்போது முழுக்க வெறுமையே எஞ்சுகிறது ஆக முடிவென ஒன்று நம்மை வெறுமையாக்குகிறதா கேள்வி ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே மனம் குதூகலிக்கிறது வருத்தங்கள் கோபங்கள் குழப்பங்கள் இவையே அடுத்தவற்றை நோக்கி எனை வழிநடத்துகிறது இதுதான் தீர்வு இதுதான் முடிவு இப்படியாப்பட்ட நிலை வெறுமையில் தள்ளவே செய்கிறது எவ்வளவு உழட்டினாலும் என்னுடைய வருத்த கோப குழப்பங்கள் எனை எப்பொழுதும் வெறுமையில் தள்ளியதில்லை வாழிய வாழியவே

சைவமாகிய நான்!

  வாரயிறுதிகளில் மட்டும் அசைவம் வாங்கும் வழக்கம் உள்ள வீடு எங்களுடையது.  வீட்டின் நால்வரும் அசைவம் சாப்பிடுவோம்.  முதன்முதலாக உடம்பு சரியில்லை, விரதம் என அடுத்தடுத்து காரணங்கள் வைத்து அசைவம் தவிர்த்த அம்மா இப்பொழுது உடல்நிலை காரணம் காட்டி முழுதும் நிப்பாட்டி கிட்டதட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.  புரட்டாசி மாதம் உள்ளிட்ட சில காரணம் வைத்து சமைப்பதும் இல்லை.  ஒரு சில சடைப்புகள் செய்து இப்பொழுது சமைக்க ஆரம்பித்து இருந்தார். சகோதரியும் இப்பொழுது சைவத்துக்கு மாறிவிட்டார்.  கொஞ்சம் கொஞ்சமாக அசைவம் குறைத்த இருவரும் கிட்டதட்ட ஒரே காலத்தில் சைவத்துக்கு மாறிவிட்டனர்.  முட்டை வைத்திருக்கும் இடத்தை பார்த்தாயா? கோழி கத்துவது பரிதாபமாக இல்லையா? கடையில் வரும் கெட்ட வாடை, சமைக்கும் பொழுது வரும் வாடை, அதனை உண்ட பின் உன் உடலும் நாறும் தெரியுமா? என ஆரம்பித்து அதுகள் என்னென்ன கருமத்தையெல்லாம் திங்கும் தெரியுமா? என அநாவசிய கான்வோக்கள் பின்னர் தந்தையாரை நிதானம் சொல்ல முடியாது என்கிற நிலையில் வீட்டில் நான் மட்டும் நான்வெஜ் என்றானது. ...

பயபக்தியில் சில நேரம்!!!

வழக்கமான வாக்கிங்தான்.     இந்த வாரயிறுதில மாரியம்மன் கோவில் பொங்கலுக்காக தண்ணியெடுத்து ஊத்துற மக்களும் விடியக்காலை நேரத்த ப்ரிஃபர் பண்றாங்க போல.   நிறைய இடங்கள்ல தோண்டி போட்டு வச்சிருக்காங்கங்குறதால என்னோட     ஷு டேமேஜ் ஆயிடுமோன்னு தயக்கத்துல நடந்து போகும் போதே முன்னால சைக்கிள்ல போற ஆள் நடு ரோட்ல எச்சி துப்பிட்டு போறாரு.     அப்பத்தான் கவனிக்கிறேன் கோவிலுக்கு தண்ணீ ஊத்த போற யாரும் செருப்பு போடல, பத்தாக்குறைக்கு ஈரம் சொட்ட சொட்ட நடந்து போறாங்க.     நம்ம நிலைமை பரவால்ல போல. ஆனா இவங்க சாமிய காரணம் வச்சு இந்த அசிங்கத்துலயும், மோசமான ரோட்லயும் செருப்பு போடாம வெறும் கால்ல நடந்து போறாங்களேன்னு கொஞ்சம் பொது நலமா சிந்தனை செல்லும் போது பின்னாடி வந்துட்டு இருந்த கொஞ்ச பேரு… “அவ ஆளு கூட சண்டை போட்டு இப்பல்லாம் எங்கயும் வெளிய போகாம சேர்ந்து போக ஆளும் இல்லாம வீட்லயே தான் கிடக்காலேன்னு பரிதாபப்பட்டு நாளைக்கு எங்க கூட கோவிலுக்கு தண்ணி ஊத்த வாடின்னு கூப்பிட்டா?!”னு காதுல விழ அப்படியே நடை வேகத்தை அவர்களின் வேகத்திற்கு ஏற்றாற்போல் மாற்றி மீத கதையையும் கேட்டு க...

ஏப்ரல் ஃபூல்…

  காலை எழுந்தபின் சந்திக்கும் சமயத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போலான அம்மாவின் பார்வை சற்றே குழப்பத்தை கொடுத்தது என்ற போதிலும் தூக்கம் முற்றிலும் கலைந்த பின்னர்     என்பதாலோ என்னவோ உடனே நேற்றைய கடைசி பேச்சு நியாபகம் வந்தது.     வீட்டில் நடக்கும் எதனையும் பேசாமல் இருப்பதை பற்றியும் சற்றேறகுறைய நிரந்தரமாக தொடரும் விஷயத்தை பற்றியும் கேட்டதில் வாக்கிங் போக சொன்ன நீயே இப்பொழுது போக விடாமல் இருக்கிறாய் என விதண்டாவாதமாக ஆரம்பித்து ஐந்து நிமிடம் என சொல்லி இவ்வளவு நேரம் (12 நிமிடம் கூடுதலாக) என சொன்னவுடன் பேச்சு அப்படியே அறுந்து போனது.     இதிலொரு செய்தி என்னவென்றால் வழக்கமாக இப்படி நடக்கும் சமயத்தில் நூலறுந்த காத்தாடி போலான அலைபாயும் மனநிலையே வாரக்கணக்கில் நீடிக்கும் என்ற நிலை போய் அடுத்தநாள் காலையே அதனை கடந்து விட்டேன் என்பதில் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி.     இது தொடருமாவென தெரியாதே என்கிற எண்ண ஓட்டத்தில் காலண்டர் பார்க்க ஏப்ரல் ஃபூல் என உள்ளிருந்து ஒரு குரல் கத்த எனக்கே சிரிப்பு வந்துவிட்டது.     இந்த நாள் இனிய நாள்.

விடை தரும் கனவு

      கனவு காணுங்கள் என வரிகள் போட்டு முன்னாள் இந்திய குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் புகைப்படம் இட்டு பொது வெளியில் பகிர்வதென்பது இன்றளவும் தொடரும் ஒரு சிலரின் வாடிக்கை.  தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்காமல் இருக்க செய்வதே கனவு என்பதையும் அவரின் பொன்மொழியாக சொல்வார்கள்.      கேட்பதற்கு அப்படியே சில்லு சில்லுனு சில்லரைய சிதற விடலாம் போல இருந்தாலும், கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்க்கும் பொழுது; நம்மை தூங்க விடாமல் ஒரு கனவு (எண்ண ஓட்டம்) இருக்குமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.  அது கிடக்கட்டும் என்னுடைய கனவு என்னை என்ன செய்கிறது என்பதை யோசித்து பார்க்கிறேன்.     சிறுவயதில் கனவு எப்பொழுதும் ரசிக்கும் படியாக இருக்கும். பள்ளி முடிந்த பின்னர் நிறைய கனவில் பொது தேர்வெழுதியிருக்கிறேன்.  காணக் கிடைக்காத நிறைய இடங்கள் கனவில் கண்டிருக்கிறேன்.  2010 முதலாக சில பல ஆண்டுகள் கனவு என்பது நிஜம் போலவே மிக கடுமையாகவே இருந்தது, என்னை பயமுறுத்துவதாகவே இருந்தன அந்த கால கட்ட கனவுகள். அக்கால கொடூர கனவுகளிலிருந்து மீண்டுவி...