Skip to main content

Posts

ஏன் எழுத தவிர்க்கிறேன்... சுய புலம்பல்

     கடைசியாக எப்பொழுது எழுதினேன் என எடுத்து பார்த்ததில் சரியாக 6 மாதமாக எதுவும் எழுதாமல் இருக்கிறேன் என தெரிந்தது.  பல வருடங்களுக்கு முன்னரே பிளாக் எழுத ஆரம்பித்து விட்டேன் எனும் போதிலும், டிராஃப்டில் போட்டு விட்டு அதன் பின்னர் டெலிட் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தேன். இப்பொழுது பயன்படுத்தி கொண்டிருக்கும் பிளாக் இரண்டு வருடங்களாக இருக்கிறது.  முன்பு பயன்படுத்திய இரண்டு பிளாக்ம் இப்பொழுது பயன்படுத்துவது இல்லை.      நகைச்சுவையாகவோ, அதீத சிந்தனையோ, ரசனையோ என்னுடைய எழுத்தில் இருக்கிறதா எனும் கேள்வி இன்னமும் மனதில் ஓடிக்கொண்டு தான் உள்ளது.  இனிமேல் மாற்ற வேண்டுமா என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவும் இல்லை.  ஆனாலும் மனதில் பட்டதை எழுதியே ஆக வேண்டுமா? என்றால் இல்லை என்பதே பதில்.  இத்தனையையும் கடந்து ஏன் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்பான பதில் ஒன்று தான் உள்ளது... அது என்னுடைய வாழ்நாள் விருப்பம். கங்கை கொண்ட சோழபுரம் கோவில் சுற்றுப்பகுதி     நான் எழுதியதை இன்னொருவர் வாசிக்க வாய்ப்பு இருக்கிறதே என்கிற எண்ணம் வரும...

Disney's Snow White

      திரைபடங்களின் முக்கிய பார்வையே அனைத்தையும் அழகாக திரையில் காட்டுவதுதான், அதிலும் fantasy கதை எனும் போது வழக்கத்தை விட அழகு சற்று தூக்கலாகவே இருக்கும்.  மேக்கப் போடாதது போல இருந்தாலும் அப்பொழுதுதான் கழுவியது போலான முகம், lipstick இருப்பது போல் தெரியவில்லை, வெட்டபட்ட முடி, சிறிது கசங்கிய உடை. இதனை உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் snow white ஆல் முடியும்.  போலவே தேர்ந்த மேக்கப், அசத்தலான உடை, அளந்து நறுக்கப்பட்ட நகம் இதனுடன் கருப்பு shade சேர்த்து Snow Whiteன் சித்தி எனும்  வில்லியை இரண்டாவது உலக அழகியாக காட்ட முடியுமா என்றால் அதற்கும் இடம் உண்டு.      ஒரு நாடு அதற்கு ராஜா, ராணி அவர்களுக்கு பனிபுயலின் சமயம் இன்முகத்துடன் பிறந்த ஒரு பெண் குழந்தை, அந்த குழந்தை தான் Snow White.  அந்த நாட்டு குடிமக்கள் கூட்டமாக சேர்ந்து, ஆப்பிளை பறித்து தோலை சீவி சுவையான  pie சமைத்து ஒன்றாக ஆடி, பாடி pie உடன் அன்பினையும் பகிர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர்.     வாழ்வில் இன்பம் என்பது ஒரு பகுதி போல் துன்பமும் ஒரு பகுதி என்பதிற்கு ஏற...

சொல்லிருக்கலாம்ல...

    சிலருடைய வெற்றியை நாம் பெற்றதாகவே எண்ணி மகிழ்வோம் அல்லவா,  அந்த இமேஜ் பார்த்த போது எனக்கு  அப்படித்தான் இருந்தது. Facebook அவ்வப்பொழுது எடுத்து scroll செய்வது வழக்கம். அவ்வாறு scroll  செய்யும் பொழுது அதனை கவனிக்க நேர்ந்தது.  என் உடன் படித்ததும் கிடையாது, சொந்தம் கிடையாது, ஒரே ஊர் கூட கிடையாது and இப்பொழுது என்னிடம் அவன் contact number கூட கிடையாது, பேசியும் வருடம் தாண்டிவிட்டது.  அப்படி இருக்கும்பொழுதும் என்னுடைய நண்பர்கள் suggestionல் பெயர் காட்டியது, FB யின் algorithm சாமர்த்தியமே.  profile பார்த்தேன், இப்பொழுது வேலைக்கு செல்கிறான், back to routine வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம்.      பழைய சம்பவங்களை எண்ணி பார்த்தேன், கொஞ்ச நேரத்திற்குள் அந்த சந்தோஷம் மறைந்து விட்டது.  ஏன் எனும் கேள்வி மட்டுமே மறுபடியும் மறுபடியும் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது.  என்னிடம் Whatsappல் நிறைய chat செய்வான், போலவே அவ்வப்பொழுது  phoneல் பேசவும் செய்வான்.  அனைத்தையும் நிப்பாட்டியாயிற்று. பேசுவதை தவிர்க்க காரணம்...    ...

புத்தகப் பருவம்... (பூமர்)

புத்தகம் நமக்காகான  ஒரு உலகத்தை நோக்கி (பெற்றோர், நண்பர்களை தாண்டி) பயணிக்க உதவும் வாகனம் என்பதே என் எண்ணம். நான் கூறுவது கண்டிப்பாக பாடம் புத்தகத்தை அல்ல.  வாழ்க்கையின் ஆரம்பத்தில் சில பகுதியை பாடப்புத்தகங்களில் செலவழிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட அடிப்படை ஒன்று. எந்த வீட்டிலும் பதின்வயது பிள்ளைகளை கதை புத்தகத்தையோ, சமூக கட்டுரைகளையோ, நாவலையோ அல்லது வார, மாத இதழ்களை கூட படிக்க அனுமதிப்பதே இல்லை. மாற்றாக பாடப்புத்தகத்தை மட்டும் கையில் திணித்து, படிப்பது இனி உன் பொறுப்பு என தாங்கள் தங்கள் கடமையை சரிவர செய்து விட்டதாக எண்ணுகின்றனர். அந்த பருவத்தில் தான் அவர்களுக்கு எதிர்கால கனவுகள் ஆரம்பிக்கும்.  அப்பொழுதுதான் உலகில் நடக்கும் பொது விஷயங்களில் ஆர்வம் மேலோங்கும். தனக்கு பிடித்தது என்பது மட்டுமல்லாது, தனக்கு எது கை வரும் என்பதும் புரிய ஆரம்பிக்கும் நேரம்.  ஆனால், அப்பொழுது அவர்கள் மதிப்பெண் எனும் மாரத்தனில் ஓடிக் கொண்டிருப்பார்கள். பதின் பருவம்தான் விரும்பிய துறை சார்ந்த ஒன்றில் நுழைந்து வருங்காலத்தில் சாதிக்கும் முயற்சியை துவக்கும் பருவம்.  அதில் அவர்க...

ஒரு பயணம்...

முந்தைய வருட தீபாவளி பயணம்⛆  ஒவ்வொரு பொருளாக பார்த்து பார்த்து தவிர்த்துக் கொண்டிருந்தேன் போலவே சேர்த்துக் கொண்டும் இருந்தேன், எளிய தீபாவளி பயணத்தின் முன்னேற்பாடாக... தூரம் 481 கிமீ என்பது கூகுளின் தெரிவு. இன்னும் இருபதை கூட்டிக் காண்பித்தது என் odometer, பயண நிறைவில். Club வகையறாக்களில் அவ்வளவு ஈடுபாடு இல்லை. மேலும், இது தனிப்பட்ட பயணமும் கூட. ஆகையால், நிதானத்தை முன்னேற்பாட்டில் பிரதானமாக வைத்திருந்தேன். தேவைகளும் வண்டியும் தயார்! இறுதியில் Petrol tank Bag மட்டுமே போதுமானதாக இருந்தது. Back Bagஐ கவனமாக தவிர்த்துவிட்டேன். Jerkin, gloves, earpiece, shoe சகிதமாக அனைத்து வசதிகளுடன் கிளம்பினேன். ஒரு சில கவனக்குறைவுகளால், கடந்த பயணம் நிறைய யோசிக்க வைத்திருந்தது. ஒப்பீட்டளவில் இம்முறை பயணம் ராஜபாட்டை என்றெண்ணமே நிறைவை கொடுத்தது. நான் racerம் கிடையாது. இப்பயணம் கட்டாயமும் கிடையாது. இந்த பயணம் ஒரு மாறுதலுக்காக மட்டுமே என்பதை மீண்டுமொருமுறை மனதிலிருத்திக் கொண்டேன். நான் Rider, அவ்வளவே! ராஜாவைப் போல பயணம் என்பதில் வருணனுக்கு சற்று மாற்றுக் கருத்து ஏற்பட்டது போலும். ...

மெளனம்

 சிறுவயதிலேயே அவனுக்கு மௌனம் அணிவிக்கப்பட்டது. மெளனமே விருப்பமாக பழக்கப்படுத்தபட்டது. மௌனத்தை பழகிக்கொண்டான். தெருவில் கத்திக்கொண்டு விளையாடும் சிறுவர்களிடையே மௌனமாய் இருந்தவனை அமைதியானவன் என்றார்கள். இரைச்சலான வகுப்பறையில் மௌனமாக இருந்தவனை அடக்கமானவன் என்றார்கள். நண்பர்களுடனான அரட்டையில் மௌனமாய் இருந்தவனை நல்லவன் என்றார்கள். ஒருநாள் அவனது மௌனத்தை கலைக்க முற்பட்டார்கள். அவனும் மௌனத்தை கலைத்தான். அவர்களின் மத்தியில் கனத்த மௌனம் நிலவியது.

90's கிட்

  டீக்கடை, காலை 6:30...   இன்னும் எத்தனை காலத்துக்கு சைக்கிளை மிதித்து கொண்டிருப்பாயென அவரை ஒருவர் இடைமறிக்கும் போதுதான் கவனிக்க நேர்ந்தது.   அவரின் தோற்றத்தை வைத்து வயது 30+ என சொல்லலாம்.   இல்லண்ணே என ஆரம்பித்த அவர், இதுவே போதுமானதாக இருப்பதாக அர்த்தமளிக்கும் ஒன்றினை அவர் பேசி முடிக்கும் போது என் டீ ஆறிவிட்டது.   ஒரே விஷயத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விதமாக சொன்னார்.   அது முற்றிலும் இயலாமை சம்பந்தபட்ட விஷயம்.   வார்த்தைகளின் ஊடே அந்த இயலாமை மறைந்து இருந்தது, அவரின் பேச்சின் வீரியத்திற்கு பயந்து வெளிவர தயங்கியது என்பதே உண்மை. வண்டியை பற்றிய பேச்சு இப்பொழுது கல்யாணம் நோக்கி திரும்பியது.  வரும் மாரியம்மன் கோவில் பொங்கலுக்குள் கல்யாணம் பண்ணி ஜோடியாக இதே ரோட்டில் அப்படி கெத்தா நடப்பேன் பாருங்கன்னு அவர் சொல்லும் தொனிக்கு கண்கள் சிறிது கலங்கியது என்னமோ உண்மை.  எப்படி என விளக்க தெரியவில்லை, காரணமும் புரியவில்லை. தன் அண்ணனின் கல்யாணத்தில் லட்சம் செலவானதென வருத்தப்பட்டார்.  கோடீஸ்வரன் கல்யாணத்துல கூட பாதாம் பால் வைக்க மாட்டாங்க.  ஆனா, ...