அம்மாவிடம் இன்றொரு தகவலாக தெரிஞ்சுகிட்ட விஷயம் என்னன்னா, வீட்டுல தங்கச்சி இருந்தால் அவ மட்டுந்த்தான் அவங்களுக்கு வெந்நீர், டீ வச்சு கொடுக்கணும் போல. இதெல்லாம் என்ன கேட்டகிரில வருதுன்னே தெரியல. Anyways, நரி வலம்போனா என்ன; இடம்போனா என்ன, என்மேல பாயக் கூடாது... that's it. அவங்க சொல்லாம நானா அவங்களோட எந்த விஷயத்திலும் தலையிடுறது கிடையாது. இன்னைக்கு தெரியாம கேட்டுட்டேன். கிச்சன்ல் வந்தபோது, அடுப்பு சும்மாதான் இருந்துச்சேனு தான் வைக்கட்டுமா என கேட்டேன், இல்லைனா நான் ஏன் கேட்க போறேன். வழக்கமாவே அவங்களோட எந்த விஷயத்திலயும் சொல்லாம செய்றது கிடையாது, அவ இருக்குறப்போ அவங்களும் என்கிட்ட முடிந்த அளவு எதுவும் சொல்/பேசுறதும் கிடையாது. இனிமேல் சொன்னாலும் செய்வேனா?!
பைக் சர்வீஸ் பில் 4333. ஏடிஎம் ல 5400 எடுத்தா 400 சேஞ்ச் தேவைப்படும்னு எடுத்தா, அதுல 500 ரூபாய் நோட்டு மட்டுந்தான் வரும் போல. நான் அந்த அமவுண்ட் போடும்போதே கவனிக்காம விட்டதால டிரான்ஸாக்ஷன் டிக்லைன் ஆகிடுச்சு. அப்பதான் அடுத்த மிஷின்ல அமவுண்ட் ஃபில் பண்ணாங்க; அதனால, அதுல எடுக்கலாம்னு போனா அங்க இருந்த எஸ்பிஐ பேங்க் ஆட்கள் விசாரிக்க, நான் சொன்னாலும் கேட்காம என்னைய கம்பள் பண்ணி (இண்டியா போஸ்ட் ஏடிஎம் வச்சிருந்தேன்) ஏற்கெனவே டிரை பண்ணதுலேயே 500ல போட்டு பாருங்கன்னு சொல்லி என்னைய 5500 எடுக்க வச்சுட்டாங்க. எனக்கு எங்க போச்சு புத்தி. அவங்க சொன்னாலும் கேட்கணும்னு அவசியம் இல்லையே; அப்புறமும் ஏன் பண்ணேன். இதுல கடைசியா பேங்க் செக்யூரிட்டி நான் ஏடிஎம் பயன்படுத்தும் போது எட்டி பார்த்ததும் மட்டுமில்லாம, பேங்க் பேலன்ஸ சத்தமா வேற சொல்றாரு.
முந்துன நாள் நடந்த சம்பவம்... ஒரு லேடி அந்த மெஷின்ல காசு எடுத்தேன்னு பாஸ்புக் எண்ட்ரி போடுற மெஷின பார்த்து அவ்வளவு கான்ஃபிடண்ட்டா சொல்றது மட்டுமில்லாம, அதுல போய் காசு எடுக்க சொல்லி கூட வந்த ஆளையும் கட்டாயப்படுத்துது.
Comments
Post a Comment